கன்னியாகுமரி கடலில் சிக்கிய வாலிபர் மீட்பு 

கன்னியாகுமரி கடலில் சிக்கிய வாலிபர் மீட்பு 
X
தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் அருகே உள்ள வடக்கு வடுகன்பற்றை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் அனீஸ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள ஒரு காற்றாலை ஸ்பேர் பார்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.      இந்தநிலையில் விடு முறைக்காக  சென்னையில் இருந்து ரெயில் மூலம் நேற்று கன்னியாகுமரி வந்தார். அங்கு வந்த அவரை அவரது தந்தை அனந்தகிருஷ்ணன் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று அழைத்து வந்தார். வரும் வழியில் சின்னமுட்டத்தில் உள்ள முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக கடலில் புனித நீராடச் சென்றனர். இதில் அனீஸ் கடலில் இறங்கி குளித்து கொண்டிருக்கும்போது  ஆழ் கடலுக்கு சென்று விட்டார்.         கடலில் குளிக்கச் சென்ற மகனை காணவில்லை என பரிதவித்த அவரது தந்தை அனந்தகிருஷ்ணன் அங்கு நின்ற மீனவர்களிடம் இது பற்றி கூறினார். உடனே சின்னமுட்டம் பங்குத் தந்தை மேக்சன் அறிவுரையின் பேரில் மீனவர்கள் நாட்டு படகுகளில் கடலில் மாயமான அனிஷை தேடி கடலுக்குள் சென்றனர்.       இது பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.      நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த அனிஷை சுமார் 2 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு மீனவர்களின் உதவியுடன் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். கடலில் மாயமான அனீஷை பத்திரமாக மீட்ட மீனவர்களையும், தீயணைப்பு துறையினரையும் பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story