கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்  

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்  
X
12 கிலோ கஞ்சா சிக்கியது
கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்களையும் அதில் பயணிக்கும் பயணிகளிடமும் நேற்று வழக்கமான சோதனையில் கன்னியாகுமரி  ரயில்வே நிலைய போலீசார் ஈடுப்பட்டு வந்தனர்.              அப்பொழுது புனேவில் இருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் ரயில் பெட்டிகளை சோதனை செய்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் பச்சை கலந்த நீல நிற டிராலி பேக் ஒன்று இருப்பதைக் கண்டனர். அதனை பலத்த பாதுகாப்புடன்  ரயில்வே போலீசார் திறந்து பார்த்த பொழுது அந்த சூட்கேசில் 12 பார்சல்களில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.        இதனை கொண்டு வந்தது யார்? என்பது குறித்து கன்னியாகுமரி ரயில்வே நிலைய போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதை தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் சுந்தர் மூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story