கோவை: மொழியை மையப்படுத்தினால் புதிய பிரச்சனைகள் உருவாகும் - இராஜேந்திர பாலாஜி !

கோவை: மொழியை மையப்படுத்தினால் புதிய பிரச்சனைகள் உருவாகும் - இராஜேந்திர பாலாஜி !
X
மொழியை மையப்படுத்தி மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாகும் என இராஜேந்திர பாலாஜி பேட்டி.
கோவை விமான நிலையத்தில் அதிமுகாவின் ராஜேந்திர பாலாஜி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மொழியை மையப்படுத்தி மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் தமிழ்நாட்டில் புதிய பிரச்சனைகள் உருவாக்கும். இது அண்ணா காலத்தில் இருந்தே பெரிய போராட்டமாக உருவெடுத்து ஜவஹர்லால் நேருவால் பார்லிமெண்டிலேயே கொடுக்கப்பட்ட உறுதிமொழியின் அடிப்படையில் இரு மொழி கொள்கைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. விருப்பம் இருப்பவர்கள் மூன்று மற்றும் நான்காவது மொழியை படித்துக் கொள்ளலாம். இதில் மாற்று கருத்தை மத்திய அரசு திணித்தால் தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும், போராட்டத்தில் இறங்கும். இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெளிவான அறிக்கையே வெளியிட்டு இருக்கிறார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து புரட்சி தலைவி அம்மா, தற்போது வரை எங்களுடைய கொள்கை இரு மொழிக் கொள்கை தான். தேவைப்படும் என்று நினைப்பவர்கள் மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ளலாம். ஆனால் மொழி என்பது திணிக்கப்படக் கூடாது. வழக்கத்தில் என்ன இருக்கிறதோ அதுபடியே சென்றால் எந்த பிரச்சனையும் இருக்காது என கூறினார்.
Next Story