மாநகரப் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை!

மாநகரப் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை!
X
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது வருகின்றனர்.‌
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனம் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு விடுத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 6:00 மணி முதல் விட்டு விட்டு பரவலாக இடி மின்னலுடன் மாநகரப் பகுதி முழுவதும் மழை பெய்து வருகிறது இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் சூரங்குடி பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது இந்நிலையில் ஆரஞ்சு அலாட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி கரையோர பகுதி மற்றும் குளங்களில் யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
Next Story