சோளிங்கர் அருகே கொலை வழக்கில் எட்டு பேர் கைது!

கொலை வழக்கில் 8பேர் கைது
சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனு (வயது 45). அதே கிராமத்தில் கோழி இறைச்சி வியாபரம் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை சுமார் 4 மணி அளவில் தனது நிலத்திற்கு தனியாக நடந்து சென்றார்.அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை மடக்கி கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிசென்று விட்டனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக மேல்வேலம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (30), ரஞ்சித் (32), திமிரியை சேர்ந்த இளவரசன் (22), ஆகாஷ் (21), சோளிங்கர் ஐப்பேடு பகுதியை சேர்ந்த கோபி (25), பாணாவரம் பகுதியை சேர்ந்த மோகன் (21), போளிப்பாக்கத்தை சேர்ந்த நிர்மல் (25), திருத் தணி பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (25) ஆகிய 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கைதான 8 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story