வாலாஜா பெருமாள் கோவிலில் ஜெய ஏகாதசி திருவிழா

வாலாஜா பெருமாள் கோவிலில் ஜெய ஏகாதசி திருவிழா
X
பெருமாள் கோவிலில் ஜெய ஏகாதசி திருவிழா
வாலாஜாவை அடுத்த மேல்புதுப்பேட்டை பசும்பொன் நகரில் உள்ள வேங்கடஜல நாராயண பெருமாள் கோவிலில் ஜெய ஏகாதசி திருவிழா நடந்தது. மாசி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய இந்த நாளில் விரதம் இருந்து பகவானை வழிபட்டால் பாவம் நீங்கி சொர்க்க லோகம் அடைவார்கள் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து அதிகாலை 3.30 மணிக்கு இந்த தலத்தில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து ஜலகுரு பழனி சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஏற்பாடுகளை மடாதிபதி மகாருத்ர சுவாமிகள், அறங்காவலர் வாசுதேவ சுவாமிகள் செய்திருந்தனர்.
Next Story