வேலை நிறுத்தம்

X
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த கல் மண் மணல் எம்-சேண்ட் மணல் லாரி டிப்பர் லாரி மற்றும் எர்த்மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனுவை ஆட்சியர் மூலம் முதல்வருக்கு மனு அளித்தனர்.இதில் நிறுத்தி வைக்கப்பட்ட மணல் குவாரிகளை முதல்வர் தலையிட்டு தொடர்ந்து செயல்பட்டு கட்டுமான துறை முடக்கம் இல்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்,அரசு கட்டுமான ஒப்பந்ததிற்கு அரசு கட்டாயம் ஆற்று மணலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,தமிழகத்தில் 426 எம்-சேண்ட் குவாரிகளுக்கு மட்டுமே அனுமதிப்பட்டுள்ள நிலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது.இதனால் தரமற்ற எம்-சேண்ட் விற்பனை செய்யப்படுகிறது என குற்றம்சாட்டிய நிலையில் இவைகுறித்து முதல்வரை சந்தித்து மனு அளிக்க முயற்சித்தும் நேரம் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டினர்.இந்நிலையின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுத்து இதனை சார்ந்துள்ள லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், கட்டிட தொழிலாளிகள்,பொறியாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க ஏழு நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Next Story

