சோளிங்கர் வட்டார மருத்துவ அலுவலகம் பணி தொடக்கம்!

X
சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஆரம்பசுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் வட்டார மருத்துவ அலுவலக கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் சசிகலா கார்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், செல்வி, வழக்கறிஞர் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பெருங்காஞ்சி ஹேமச்சந்திரன் வரவேற்றார். ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வட்டார மருத்துவ அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் செல்வத்தரசி, மோகனவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விஸ்வநா தன், செங்கல்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் மற்றும் துரைசாமி, பாலு, குமார், ஜெயச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து அருகில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருவதை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story

