தச்சன்பட்டரை பயணிகள் நிழற்குடை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

தச்சன்பட்டரை பயணிகள் நிழற்குடை சீரமைக்க மக்கள் கோரிக்கை!
X
பயணிகள் நிழற்குடை சீரமைக்க மக்கள் கோரிக்கை!
காவேரிப்பாக்கம் ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள தச்சன்பட்டரை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் நிழற்குடையை சுற்றிலும் செடிகள், புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் சிலர் நிழற்குடையை மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. சிலர் இங்கு அமர்ந்து மது குடித்து விட்டு, பாட்டில்கள், பிளாஸ்டிடம்ளர்களை அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். ஒரு சிலர் பாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடைக்குள் சென்று காத்திருப்பதற்கு பதிலாக ரோட்டில் வெயிலில் காத்திருந்து பஸ்களில் ஏறி செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story