ராட்சத விளம்பர பேனர்களை அகற்ற, வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

ராட்சத விளம்பர பேனர்களை அகற்ற, வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
X
ராட்சத விளம்பர பேனர்களை அகற்ற, வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
செங்கல்பட்டு முதல் பெருங்களத்தூார் வரையிலான 30 கி.மீ., நீள சாலை, சென்னையின் நுழைவுவாயிலாக உள்ளது. இந்த சாலையில், ஒரு மணி நேரத்திற்கு 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இச்சாலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையம், வண்டலுார் உயிரியல் பூங்கா, தனியார் பள்ளிகள், கல்லூாரிகள், உணவகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ளன.இந்த சாலையின் இரு பக்கங்களிலும் உள்ள கட்டடங்கள் மேல், பல டன் எடையுள்ள, 200க்கும் மேற்பட்ட ராட்சத விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பர பேனர்களால், கவனம் ஈர்க்கப்படும் வாகன ஓட்டிகள், முன்னே செல்லும் வாகனங்களோடு மோதுவதும், சாலையில் சறுக்கி விழுந்து காயமடைவதும் தினமும் நடக்கிறது. தவிர, பெரும் விபத்தில் சிக்கி, வாகன ஓட்டிகள் உயிரிழப்பதும் மாதம்தோறும் நடக்கிறது. காற்று பலமாக வீசும்போதும், ஸ்திரத்தன்மை இழக்கும் போதும், இந்த விளம்பர பேனர்கள் அடியோடு சாய்ந்து கீழே விழவும் அதிக வாய்ப்புள்ளது.எனவே, இந்த ராட்சதவிளம்பர பேனர்களை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story