சிகரெட் தர மறுத்த கடைக்காருக்கு அரிவாள் வெட்டு : ரவுடி கைது!

சிகரெட் தர மறுத்த கடைக்காருக்கு அரிவாள் வெட்டு : ரவுடி கைது!
X
எட்டையபுரம் அருகே கடனுக்கு சிகரெட் தர மறுத்த பெட்டி கடைக்காரரை அரிவாளால் வெட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்
. தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தில் மாரிச்சாமி என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர்(52) என்பவர் அங்கு வந்து கடனுக்கு சிகரெட்டை கேட்டுள்ளார். ஆனால் மாரிச்சாமி பணம் கொடுத்தால் மட்டும்தான் சிகரெட் தருவேன் என்று கூறியுள்ளார். உடனே மது போதையில் இருந்த ஜெய்சங்கர், "நான் யார்னு தெரியுமா? நான் பெரிய ரவுடி. ஒழுங்கு மரியாதையா சிகரெட் கொடு, என்று மிரட்டியுள்ளார். அப்போதும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெய்சங்கர் தனது வீட்டுக்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து மாரிச்சாமியின் கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். இதில் காயம் அடைந்த மாரிச்சாமி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகேஷ் அரவிந்த் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த ஜெய்சங்கரை கைது செய்தனர். அவர் இதுபோன்று அப்பகுதி மக்களிடம் அடிக்கடி ரகளை செய்வதும், தனக்கு பணம் கடன் தரவில்லை என்றாலும் அவர்களை தாக்கி சண்டை போடுவதுமாக தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Next Story