அரசு மருத்துவமனையில் திருட்டுக்கள் அதிகரிப்பு: நோயாளிகள் அவதி

அரசு மருத்துவமனையில் திருட்டுக்கள் அதிகரிப்பு: நோயாளிகள் அவதி
X
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் வார்டு பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளார்..
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்கள் வார்டு பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளார்.. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி கிளை செயலாளர் ஆறுமுகம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழை மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக பெண்கள் வார்டு பகுதியில் தங்கி சிகிச்சை நோயாளிகள் அவர்களுக்கு உதவி செய்யும் உறவினர் (ATTENDER) உடைமைகள் காணாமல் போய்விடுகிறது. நோயாளிகள் உதவி செய்யும் உறவினர்கள் தங்கள் உடமைகளை பாதுகாக்க முடியாத அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக பெண்கள் வார்டு பகுதியில் செல்போன்களை திருடிச் சென்று விடுகின்றனர். இதனால் நோயை குணப்படுத்த வரும் நோயாளிகள் தங்களது உடமைளை பறிகொடுத்து மன உளைச்சளுக்கு ஆளாகின்றனர். சம்பந்தம் இல்லாத வெளியாட்கள் உரிய அனுமதி இல்லாமல் அத்துமீறி வந்து பொருட்கள் மற்றும் செல்போன்களை திருடுகிறார்கள். இரண்டாம் தளத்தில் கண்காணிப்பு கேமிரா இல்லாத காரணத்தினால் திருடர்கள் சுலபமாக வந்து செல்கின்றனர். ஆகவே காவல்துறை நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story