பட்டா வழங்கிய இடத்தை பிரித்து தரக்கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு

பட்டா வழங்கிய இடத்தை பிரித்து தரக்கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு
X
சிவகங்கை அருகே பட்டா கொடுத்து 20 ஆண்டுகளாகியும் இடத்தை பிரித்துகொடுக்காததால் மாடக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மாடக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 101 ஆதிதிராவிடர் குடும் பங்களுக்கு 2006 ஜனவரியில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் 2 சென்ட் வீதம் வழங்கப்பட்டது. இதற்காக அதே பகுதியில் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 3.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் அளவீடு செய்து மனையிடங் களாக பிரித்து தரவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் ஆதிதிராவிடர் நலத் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் முறையீடு செய்தனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் கூறுகையில், ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால் அதன் பின்னர் இடத்தை அளவீடு செய்து பிரித்து தரவில்லை. இதனால் நிலம் கேட்டு தொடர்ந்து அலுவலகங்களுக்கு அலைந்து வருகிறோம்' என்றனர்.
Next Story