ஊருக்கும் வராமல் பைபாஸில் பறக்கும் பேருந்துகள் : புகார் மனு

X
ஆட்சியர் உத்தரவையும் மீறி, ஸ்ரீவைகுண்டம் ஊருக்கும் வராமல் பேருந்துகள் பைபாஸில் செல்வதாக பயணிகள் நலசங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் வட்டார பயணிகள் நலசங்கம் சார்பில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திற்குள் போக்குவரத்து விதிமுறைநகளின்படியும் ஆணைப்படியும் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க தங்களின் மேலான உத்திரவிற்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார பொதுமக்களின் சார்பாகவும், பயனிகள் நலசங்கம் சார்பாகவும் கோடான கோடி நன்றிகளை செலுத்துகிறோம். வட்டாட்சியர் தலைமையில் நடந்த இரண்டு சமாதான கூட்டத்திற்கு பிறகு வந்த பேருந்துகளில் அரசு போக்குவரத்து அதிகாரிகள் பைபாஸ் ரைடர் பேருந்துகளை கட்டணத்தை குறைக்க அவகாசம் கேட்டனர். வேண்டுமென்றே குளறுபடிகளை செய்து வருகின்றனர். இதனால் மீண்டும் பேருந்துக்கள் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திற்குள் வராமல் புறவழிசாலையாக செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். போக்குவரத்து அதிகாரிகள் அரசு போக்குவரத்து கழகம் பொதுமக்களின் சேவைகளுக்காகதான் என்பதை மறந்து போக்குவரத்து அதிகாரிகள் லாப நோக்கத்தில் செயல்படுகிறனர் என்ற அச்சம் ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்திரவை விட மேலான உத்திரவு இல்லை. அதனை தவிர்த்து சுற்றறிக்கை விடுவது போன்றவைகள் வேண்டுமென்றே கட்டணத்தை குறைக்க கால அவகாசம் கேட்பது மக்கள் நலனை புறக்கணிப்பது ஆகும். எனவே உடனடியாக அனைத்து பேருந்துகளும் உரிய நடைமுறை சட்டப்படி ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

