வெயில் வாட்டியது

வெயில் வாட்டியது
X
தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் பதிவு ஈரோடு மக்களை வாட்டி வதைக்கும் வெயில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் மக்கள்
ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் நீடிக்கிறது. குறிப்பாக மதியம் 11 மணி முதல் 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். ஈரோட்டில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு, காளை மாட்டு சிலை போன்ற பகுதிகளில் மதிய நேரம் மக்கள் நடமாட்டம் இன்றி வெடிச்சோடி காணப்படுகிறது. வெயிலுடன் சேர்ந்து அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பெண்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குடைப்பிடித்த படியும் முகத்தை துணியால் மூடிய படியும் செல்வதை காண முடிகிறது. வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கினாலும் வெப்ப காற்றால் புழுக்கம் நிலவுகிறது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி அடைந்து வருகின்றனர். வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை மக்கள் அதிகம் விரும்பி பருகி வருகின்றனர். குறிப்பாக கரும்பு, இளநீர், மோர் மோர் , நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது இன்னும் ஏப்ரல் மே மாதங்களில் என்ன செய்யப் போகிறோம் என மக்கள் அச்சப்பட்டுள்ளனர்.
Next Story