கோவை: சங்கீத் என்பது தமிழக கலாச்சாரமா - செல்வப் பெருந்தகை !

கோவை: சங்கீத் என்பது தமிழக கலாச்சாரமா - செல்வப் பெருந்தகை !
X
சங்கீத் போன்ற வடகலாச்சாரங்களை இங்கு கொண்டு வந்து திணைக்காதீர்கள் என செல்வபெருந்ததை காட்டம்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, உண்மைக்குப் புறம்பாக பேசுவதும், இட்டுகட்டி பேசுவதும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக முனைப்போடு செயல்படுவதும் பாஜக தலைவரின் வேலை, ஆனால் செவ்வாலியர் விருதை சிவாஜி கணேசனுக்கு கொடுத்தார்கள், ஆனால் அந்த விருது பாஜக தலைவருக்கே பொருந்தும். இங்கு ஒரு பேச்சு, அங்கு ஒரு பேச்சு, அதன் பின்பு பேசிய பேச்சை திரும்ப பெறுவது, என அண்ணாமலை பேசிக் கொண்டிருக்கிறார். பாஜக என்பது தமிழ்நாட்டுக்காரன் கட்சியா,? தமிழ்நாட்டை பிரதிபலிக்கிற கட்சியா என்பதை அவர்கள் கூற வேண்டும். தமிழ்நாடு மக்கள் எல்லாம் ஒரு புறம் இருக்கிறார்கள், ஆனால் நாக்பூரில் என்ன அஜந்தாவை ஆர்எஸ்எஸ் போட்டுக் கொடுக்கிறதோ, அதை ஒன்றிய பாஜக தமிழ்நாட்டு பாஜக மூலமாக செயல்படுத்துகிறது, அப்படியானால் எதற்கு ஒரு கட்சி?.. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக இருக்கக்கூடிய ஒரு கட்சி தேவையா?.. மும்மொழி கொள்கையை எங்கள் மீது திணைக்காதீர்கள் என்று கூறுகிறோம். வட கலாச்சாரத்தில் இருந்து, சங்கீத் என்ற ஒன்றை இங்கு எடுத்து வந்து விட்டிருக்கிறீர்கள். சங்கீத் என்பது தமிழ்நாட்டு கலாச்சாரமா? பண்பாடா?.. இதையெல்லாம் திணித்து இலவசமாக கொடுப்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
Next Story