சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்
X
பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் பூக்கள் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு இன்று பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் இன்று ஒரு மல்லிகை ரூ.500 முதல் ரூ.550 வரை விற்பனையாகிறது. கனகாம்பரம் ரூ.500க்கும், பிச்சிப்பூ ரூ.400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சங்கரன்கோவில் பகுதிகளில் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்ததால் வரத்து குறைந்தபோதும் பூக்களுக்கு விலை குறைந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மல்லிகைப் பூவின் விலை குறைந்ததால் கவலை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story