வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு
X
சிறுமிகளை கர்ப்பமாக்கிய இரு வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (19). கட்டிட தொழிலாளி. தற்போது ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். அப்போது பிளஸ் - 1 படிக்கும் சிறுமியிடம் சத்யராஜ் ஆசைவாரத்தை கூறி பழகியுள்ளார். பின்னர் திடீரென அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக உள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் குழந்தை திருமண தடைச் சட்டம், போக்சோ பிரிவுகளில் சத்யராஜ் மீது வழக்கு பதிவு செய்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல் ஈரோடு மாவட்டம் திங்களூர், கிரேநகர், சி.எஸ்.ஐ வீதியைச் சேர்ந்தவர் சஜி (22). தனியார் கல்லூரியில் எம்.காம் படித்து வருகிறார். இவர் 17 வயது கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார். மனைவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் சஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story