சாலையில் தார் போடும் பணி போக்குவரத்தில் மாற்றம்

சாலையில் தார் போடும் பணி போக்குவரத்தில் மாற்றம்
X
மார்த்தாண்டம்
குமரி மாவட்டம் களியக்காவிளை - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பழுதுபட்ட பகுதி தார் போடும் பணி நடந்து வருகிறது அதாவது வெட்டுவெந்நி முதல் பம்மம் வரை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ரோடு பல்லாங்குழிகளாக படுமோசமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது உண்டு.        இந்த நிலையில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கீழ் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடு தார் போடும் பணி நடந்து வருகிறது. இதைப்போல் மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் பழைய தியேட்டர் ஜங்ஷன் வரை இருபுறமும் இன்டர்லாக் போடப்பட உள்ளது. இதனால் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் ஜங்ளனிலிருந்து பம்மம் வரை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது .      பஸ் ஆட்டோ போன்ற வாகனங்கள் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. லாரிகள் சாங்கை, உண்ணாமலைக்கடை, திக்குறிச்சி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதற்கான பணி ஒரு வாரம் நடைபெறும் என தெரிகிறது.
Next Story