பாதாள சாக்கடை பணி முடிந்தும் சீரமைக்கப்படாத தெருக்கள்

பாதாள சாக்கடை பணி முடிந்தும் சீரமைக்கப்படாத தெருக்கள்
X
பாதாள சாக்கடை
மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பி.தர்மத்துப்பட்டி பகுதியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக தெருவில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டபட்டன. பாதாள சாக்கடை பணி நிறைவுற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது வரை தோண்டப்பட்ட பள்ளங்கள் சீர் செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பேரூராட்சி நடவடிக்கை தேவை.
Next Story