பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இரண்டு பேருந்துகள் இயக்கம்

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இரண்டு பேருந்துகள் இயக்கம்
X
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இரண்டு பேருந்துகள் இயக்கம்
திருச்செங்கோடு ஒன்றிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு மேற்கொண்ட போது மோடமங்கலம்,தண்ணீர் பந்தல் பாளையம்,பச்சாம்பாளையம் அதே போல் பட்லூர் பெருமாள் மலை,இறையமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் வேண்டுமெனவும் குறைந்தபட்சம் பள்ளி குழந்தைகள் வேலைக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்லும் நேரத்திலும் திரும்பி வரும் நேரத்தில் ஆவது பேருந்துகள் வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்செங்கோடு மோடமங்கலம் தண்ணீர் பந்தல் பாளையம் பச்சாம்பாளையம் சங்ககிரி விவேகானந்தா கல்லூரிஆகிய பகுதிகள் வழியாக பள்ளி நேரமான காலை ஏழு ஐந்து மணிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் திரும்பி வரும் நேரமான ஐந்து 50 மணிக்கு திருச்செங்கோடு முதல் குமாரபாளையம் வரையிலான வழித்தடத்தில் 8 சி என்ற பேருந்தும் திருச்செங்கோட்டில் இருந்து இறையமங்கலம் செல்லும் 11ம்என் வழித்தட பேருந்து பெருமாள் மலை பட்டலூர் கொக்கராயன் பேட்டை வழியாக செல்லும் படியும் அமைக்கப் பட்டுள்ளது.இந்தப் பேருந்துகளின் துவக்க விழா இன்று பேருந்து நிலையத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்மாதேஸ்வரன்நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே எஸ் மூர்த்தி திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தலைமை செயற்குழு உறுப்பினர்நடேசன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் ராயல் செந்தில்நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு திருச்செங்கோடு நகர செயலாளர் நகர் மன்ற துணைத் தலைவர் கார்த்திகேயன்திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் திமுக மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாள திருநங்கை ரியாதிருச்செங்கோடு அரசு போக்குவரத்து கழக டிவிஷனல் மேலாளர் செங்கோட்டுவேல் பணிமனை மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் உள்ளிட்டபலரும் கலந்து கொண்டனர்
Next Story