பள்ளி அருகே கஞ்சா விற்ற பெண் உட்பட இருவர் கைது

X
தேனி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று பூதிப்புரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்பொழுது அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியின் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வீரலட்சுமி (43), மகாலிங்கம் (27) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
Next Story

