திருவேங்கடம் அருகே குழந்தைகளுடன் வீடு இல்லாமல் பெண் தவிப்பு

திருவேங்கடம் அருகே குழந்தைகளுடன் வீடு இல்லாமல் பெண் தவிப்பு
X
குழந்தைகளுடன் வீடு இல்லாமல் பெண் தவிப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள அழகாபுரி கிராமத்தை சேர்ந்த குருஸ்மேரி இவரது கணவர் மனநோயால் பாதிக்கப்பட்ட இவரை பிரிந்த நிலையில் இவர் தனது சொந்த ஊரான அழகாபுரி பகுதியில் கட்டிடத்தொழில் சித்தாள் வேலை செய்து வரும் தனது அம்மாவுடன் பாழடைந்த வீட்டில் வசிப்பதாகவும் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு வருவதாக கூறும் அவர் அந்த கிராம ஊராட்சிமன்ற தலைவரிடம் கலைஞரின் கனவு இல்லம் அல்லது தொகுப்பு வீடு கேட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் இருப்பதாகவும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறிய குரூஸ்மேரி தமிழக அரசு எங்களை போன்ற ஏழைகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் அல்லது தொகுப்பு வீடு கட்டித் தருமாறு கோரிக்கை எடுத்துள்ளார்.
Next Story