ராமநாதபுரம் அங்கன்வாடியில் வேலையை நிறுத்திய பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வாலாந்தரவை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் மராமத்து பணி செய்ய மதுரை தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது இதில் சிறு சிறு வேலைகளை மட்டும் செய்துவிட்டு நேற்று கொட்டும் மழையில் அங்கன்வாடி கட்டிடத்திற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டு இருந்துள்ளனர் இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக பணியை தடுத்து நிறுத்தினர் இதுகுறித்து வாலாந்தரவை முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் சுரேஷ் கூறுகையில்..... வாலாந்தரவை அங்கன்வாடி மையத்தின் கட்டிட சுவற்றில் தண்ணீர் கசிந்து கொண்டிருக்கும் பொழுது பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது இதை அறிந்த நான் உள்பட பொதுமக்கள் அங்கன்வாடிக்கு பெயிண்ட் அடிக்கும் பணியை தடுத்து நிறுத்தினோம் அரசாங்கம் குழந்தைகள் பயிலக்கூடிய இந்தப் பகுதியை மராமத்து செய்து முறையாக சுவற்றுக்கு வர்ணம் பூச ஒப்பந்த பணியை ஒதுக்கீடு செய்து உள்ளது ஆனால் சில தனியார் நிறுவனங்கள் வாலாந்தரவை ஊராட்சி பகுதி மற்றும் மண்டபம் ஊராட்சி பகுதிகளில் வர்ணம் பூசும் ஒப்பந்த பணியை எடுத்துவிட்டு தரமற்ற மூலப்பொருட்கள் மூலம் வர்ணம் பூசுவது கண்டிக்கத்தக்கது முறையாக பணி செய்யாமல் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் வகையில் செய்த இந்த பணியை பொதுமக்கள் நாங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தியுள்ளோம் தொடர்புள்ள அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம் அங்கன்வாடி மையம் என்பது குழந்தைகள் படிக்கக்கூடிய மையம் ஆகையால் இதை முறையாக ஆய்வு மேற்கொண்டு பணிகள் நல்ல முறையில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்
Next Story



