கோவை: கொங்கு மண்டலத்தில் மழைக்கு வாய்ப்பு !

X
டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் ஏற்கனவே கனமழை பெய்து வரும் நிலையில், மேகங்கள் கொங்கு மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருவதாக கோவை வானிலை ஆய்வாளர் சந்தோஷ் கிருஷ் இன்று தெரிவித்துள்ளார். அவரது கணிப்பின்படி, இன்று இரவு முதல் கொங்கு மண்டலத்தில் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். கோவை நகரத்திலும் இன்று மாலை முதல் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
Next Story

