கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழா !

கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழா !
X
எஸ்.பி வேலுமணியின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி மணமக்களை வாழ்த்தினார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் வித்யா தேவி தம்பதியினரின் மகன் விஜய் விகாஸ் மற்றும் துடியலூர் சந்திரமோகன் - திருமாலினி தம்பதியினரின் மகள் தீக்ஷனா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நேற்று மாலை கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது. முன்னதாக, மணமக்களின் திருமணம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. திருமண வரவேற்பு விழாவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். விழாவில் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கொடிசியா அரங்கிற்கு சென்று மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். இந்த திருமண வரவேற்பு விழாவில் நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன், மராட்டிய மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் செ.ம. வேலுசாமி, கே.பி. முனுசாமி, ஆர்.பி. உதயகுமார், காமராஜ், விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சிவக்குமார், நடிகைகள் கௌதமி, விந்தியா, தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ், எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், தாமோதரன், அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம், ஏ.கே. செல்வராஜ், வி.பி. கந்தசாமி, அமுல் கந்தசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
Next Story