மண்டைக்காடு: கோவிலில் இன்று நள்ளிரவில் ஒடுக்கு பூஜை

X
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கி இன்று செவ்வாய்க்கிழமை நிறைவடைகிறது. இன்று பத்தாம் பத்தாம் திருவிழாவில் அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து அம்மன் வெள்ளிப் பல்லக்கில் வீதி உலா, அதிகாலை 4.30 மணிக்கு அடியந்திர பூஜை, காலை 6 மணி குத்தியோட்டம் தொடங்கியது. பின்னர் வழக்கமான தீபாவளி பூஜைகள் நடைபெற்றன. இன்று மாலை 6 மணிக்கு தங்கத் தேர் பவனி நடக்கிறது. தொடர்ந்து சாய ரட்னச, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பின்னர் நள்ளிரவு 12:30 மணிக்கு மேல் 1மணிக்குள் ஒடுக்கு பூஜை நடக்கிறது. ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோவிலுக்கு கொண்டு வந்த நிகழ்ச்சி பன்னிரண்டு மணிக்கு நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். முன்னதாக காலையிலிருந்து கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். விழா முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
Next Story

