பிளம்பரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது 

பிளம்பரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது 
X
ஈத்தாமொழி
நாகர்கோவில், கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (35). பிளம்பர். இவர் நேற்று அத்திக்கடை சந்திப்பு பகுதியில் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெற்கு சூரங்குடி பகுதியை சேர்ந்த அரவிந்த் பிரியன் (23) என்பவர் கையில் இருந்த கத்தியை காட்டி சுப்பிரமணியிடம் பணம் கேட்டு மிரட்டினார்.      மேலும் அவரிடம் இருந்த ரூ.  650 பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சுப்ரமணியன் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் அரவிந்த் பிரியன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் அரவிந்த் பிரியனை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரவிந்த் பிரியன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
Next Story