ரயில்வே மேம்பாலத்துக்கு கீழே மழைநீர் தேங்கி மக்கள் அவதி
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பழவேற்காடு சாலையில் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழே ஒரு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக குளம் போல் தேங்கிய மழைநீர் மழை நீரை வெளியேற்ற மழைநீர் செல்லும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணியில் பொன்னேரி நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் மழைநீர் அடைப்பை சரி செய்து மோட்டார் மூலம் நீரை வெளியேற்றினால் மட்டுமே வாகனங்கள் மழை நீரில் பாதிப்பு இல்லாமல் செல்லக்கூடிய சூழல் உள்ளது தொடர்ந்து மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே ரயில்வே மேம்பால சாலையில் வாகன ஓட்டிகள் செல்வதற்கு கடும் சிரமம் அடைந்து வருகின்றனர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story





