திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

திருவள்ளூர் சுற்றுவட்டாரங்களில் பலத்த மழை சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது வட்டாட்சியர் அலுவலகத்தில் மழை நீர் வெளியேறு வழியின்றி குளம் போல் தேங்கி பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு புட்லூர் சேலை புல்லரம்பாக்கம் திருப்பாச்சூர் சிறுவானூர் கண்டிகை குப்பம்மாள் சத்திரம் பாண்டூர் எடப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது தொடர்ந்து பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் வெள்ளம் என பெருக்கெடுத்து ஓடியது வட்டாட்சியர் அலுவலகத்தில் மழை நீர் வெளியேறும் புதிய வழியின்றி குளம் போல் தேங்கி நோய் பரப்பும் விதத்தில் இருந்தது இதனால் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அப்பகுதியில் அமைந்த சார்பதிவாளர் அலுவலகம் கிளைச் சிறை கருவூலம் இ சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக பொதுமக்கள் வந்த போது மழை நீரில் கடும் அவதிக்க ஆளாயினர் முறையாக மழைநீர் வடிகால்களை மேம்படுத்த வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Next Story