பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் மாணவர்களை கைது செய்து விசாரணை

X
கொரட்டூர் ரயில் நிலையத்தில் ரயிலில் பயணித்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கற்களை எரிந்த விவகாரம், பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 9 பேரை பெரம்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர் திருவள்ளூரை சேர்ந்த பாலா, விக்னேஷ், ராகேஷ், பூபதி, சஞ்சய், உமாபதி உட்பட 9 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புறநகர் மின்சார ரயில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் ரயில் நிலையம் வரை செல்லும் மின்சார ரயிலானது நேற்று மாலை கொரட்டூர் ரயில் நிலையம் வழியாக சென்றது. அப்போது கொரட்டூர் ரயில் நிலைய நடைமேடையில் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் திடீரென கீழே கிடந்த ஜல்லி கற்களை கொண்டும் கையில் வைத்திருந்த பொருட்களைக் கொண்டும் ரயிலில் பயணித்த மாணவர்கள் மீது தூக்கி எறிந்தனர். இதனால் இரு தரப்பு மாணவர்களுக்கும் இடையே மாறி மாறி கையில் வைத்திருந்த பொருட்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், ரயிலில் பயணித்த பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. ரயிலின் கதவை மூடியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக இதுகுறித்து பொதுமக்கள் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசாருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கீழே கிடந்த கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட 9 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பதும் ரூட் பிரச்சனை காரணமாக மாநிலக் கல்லூரி மாணவர்கள் பயணித்த ரயில்மீது கற்களை கொண்டு வீசியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிறுவர்கள் 5 பேர் உட்பட 9 பச்சைப்பன் கல்லூரியை சேர்ந்த மாணவர்களை பெரம்பூர் ரயில்வே போலீசார் கைது செய்தனர். திருவள்ளூரை சேர்ந்த பாலா, விக்னேஷ், ராகேஷ், பூபதி, சஞ்சய், உமாபதி உட்பட 9 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

