சட்டவிரோதமாக செயல்படும் சவுடு மண் குவாரி நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்
தமிழ் ஆந்திர எல்லையில் வனப்பகுதிகளை அழித்து சட்டவிரோதமாக செயல்படும் சவுடு மண் குவாரி தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் திருவள்ளூர் மாவட்டம் தாமரைக்குப்பம் கிராமத்தை ஒட்டி தமிழக ஆந்திர எல்லையில் காப்பு காடு வனப்பகுதியில் கனிமவள விதிமுறைகளை மீறி ஆந்திபகுதி என கூறி கொண்டு உரிய அனுமதி பெறாமல் சுமார் 15 அடி ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி சாலை பணிகளுக்காக போலியாக பில் வழங்கி விற்பனை செய்து வருகின்றனர் தமிழக பகுதியான ஊத்துக்கோட்டை கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வழியாக அதிக அளவில் விதிமுறைகளை மீறி சவுடு மண் ஏற்றிவரும் டிப்பர் லாரிகளால் கால்வாய் பகுதி விரிசல் அடைந்துள்ளது மேலும் விவசாயம் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது எனவே அப்பகுதியில் வனப்பகுதியை அழித்து சவுடு மண் அள்ளப்பட்டு இரவு பகலாக பல்வேறு இடங்களுக்கு தமிழகத்தின் எல்லை வழியாக கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது ஊத்துக்கோட்டை காவல்துறையினர் வருவாய் துறை அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக சோதனை மேற்கொண்டு சட்டவிரோத சவுடு மண் விற்பனையை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் அதிக அளவில் சவுடு மண் ஏற்றி கொண்டு தார் பாயை கூட கட்டாமல் செல்வதால் தூசி பரவி வாகன ஓட்டிகள் வியாபாரிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தினம்தோறும் 500க்கும் மேற்பட்ட மண் கொண்டு லாரிகள் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் விவசாயிகள் வியாபாரிகள் குற்றம் சாட்டினர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அப்பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது..
Next Story





