கொட்டி தீர்த்த மழையால் சேரும் சகதியுமாக மாறிய திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் இடம்
மத்திய அரசை கண்டித்து நாளை திருவள்ளூர் அருகே உள்ள திருப்பாச்சூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கலைஞர் திடல் அமைத்து அதில் கண்டன பொதுக்கூட்டம் திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் நடைபெறுகிறது இதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று கண்டன உரை ஆற்ற உள்ளார் இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் குட்டி தீர்த்த கனமழையால் பொதுக்கூட்ட மேடை முன்புறம் கட்சித் தொண்டர்கள் அமரும் இடம் சேரும் சகதியுமாய் மாறியது அதனை எல்என்டி தனியார் நிறுவனத்தின் உதவியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மண்ணை கொண்டு வந்து நிரப்பி ஜேசிபி மற்றும் சமன்படுத்தும் ராட்சசன் எந்திரங்கள் கொண்டு விழா நடைபெறும் இடம் இரவு பகலாக சீரமைக்கப்பட்டு வருகிறது குளம் போல் தேங்கி உள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கையில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு முழுவீச்சில் பணிகள் நடக்கிறது
Next Story




