மத்திய அரசைக் கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு குடியரசு கட்சியினர் செவாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர், மார்ச் 11- மத்திய அரசைக் கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு குடியரசு கட்சியினர் செவாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து அக்கட்சியினர் முழக்கமிடடனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் குழுமூர் இராமு தலைமை வகித்து பேசினார். தலைவர் எழிலன் தா.பழூர் ஒன்றியச் செயலர் கொ.பிரபு, மாநில பொதுச் செயலர் த.உதயசூரியன், விடுதலைப் புலிகள் கட்சி மாநில துணைச் செயலர் ஜெக.சரண்ராஜ், அதிமமுக மாவட்டச் செயலர் தே.ஆல்பர்ட், வேப்பூர் ஒன்றிய தமிழ்நாடு குடியரசு கட்சி ரா.சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
Next Story