விவசாயி தூக்கிட்டு தற்கொலை

X
திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே நாகைநல்லூா் ஊராட்சி கவரப்பட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் கணேசன் (57) விவசாயி. இவா் தனது தோட்டத்தின் அருகிலுள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவலின் பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று கணேசனின் சடலத்தை மீட்டு, முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story

