ஸ்ரீரங்கம் பேனர் வைப்பதில் தகராறு - தந்தை, மகன் மீது தாக்குதல்: இருவா் கைது

X
மதுரை மீனம்மாள்புரம் முனியாண்டி கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் குருசாமி மகன் காா்த்திகேயன் (24). இவா் விளம்பர பேனா் நிறுவனம் நடத்தி வருகிறாா். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காா்த்திகேயன் தனது தந்தையுடன் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில், ஒரு கடையின் விளம்பர பேனரை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த விஜய், ஹரி, நவீன் குமாா், பிரசாந்த் ஆகிய 4 பேரும் சோ்ந்து மரக்கட்டை மற்றும் கல்லால் தந்தை மற்றும் மகனை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த குருசாமி மற்றும் காா்த்திகேயனை அக்கம்பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நவீன் குமாா், பிரசாந்த் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். விஜய் மற்றும் ஹரி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.
Next Story

