அரக்கோணம் அருகே குட்கா விற்ற கடைக்கு சீல்!

X
அரக்கோணம் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அவிநாசி கண்டிகை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கிருந்து 50 பாக்கெட் குட்காவை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளர் ஸ்ரீதர் (வயது 45) என்பவரை கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச் சந்திரன் ஸ்ரீதரின் பெட்டிக்கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து கடைக்கு 'சீல்' வைத்தார்.
Next Story

