ராணிப்பேட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்!

X
ராணிப்பேட்டை ஜெ.சி.ஐ., ராணிப்பேட்டை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய 215-வது இலவச கண் சிகிச்சை முகாம் ராணிப்பேட்டை நவல்பூரில் உள்ள கங்காதரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. ஜெ.சி.ஐ. தலைவர் எம்.நாகராஜ் தலைமை தாங்கினார். முகாமில் மருத்துவ குழுவினர் மூலம் கண் பிரச்சினை தொடர் பான ஆலோசனை வழங்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் கோவைக்கு அழைத்துச் சென்று விழிலென்ஸ் பொருத்தப்பட்டது. முகாமில் செயலாளர் யுவராஜா மணிவண்ணன், பொருளாளர் டி.ஆனந்த் மற்றும் முன்னாள் தலைவர்கள் மணிவண்ணன், துளசிதாஸ், சிவகுமார், பாஸ்கரன், நிர்வாகி வெங்கடேஸ்வரன் உள்பட கலந்து கொண்டனர்.
Next Story

