வழக்கு பதிவு

வழக்கு பதிவு
X
அந்தியூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமை யிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்புலிசாம்பாளையம், வடக்கு தெருவில் உள்ள ஒரு காலி இடத்தில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அதைப் பகுதியைச் சேர்ந்த அய்யா சாமி (41), நடராஜ் (40), பிரபு (30), அர்த்தநாரி (28), பிரபு (28) ஆகியோர் என்பதும் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதும் தெரிய வந்தது.இதனை எடுத்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.4,510 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story