கோவை: மருதமலையை சுற்றி வட்டமடித்த டிரோன் -அபராதம் விதிப்பு !

கோவை: மருதமலையை சுற்றி வட்டமடித்த டிரோன் -அபராதம் விதிப்பு !
X
அனுமதி பெறாமல் மருதமலையில் ட்ரோன் இயக்கிய, வாலிபரிடம் ட்ரோனை பறிமுதல் செய்த வனத்துறையினர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருமணம் செய்வதற்காக பல ஜோடிகள் குடும்பகமா வந்து இருந்தனர்.அவர்களுடன் உறவினர்களும் ஏராளமானவர்கள் வந்த இருந்தனர். இந்த நிலையில் டிரோன் ஒன்று கோவிலை சுற்றி வட்டமடித்து படம் பிடித்துக் கொண்டு இருந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட வனத் துறையினர். இதுகுறித்து வனப் பாதுகாவலர் சரவணகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர் விசாரணை செய்ததில் டிரோனை இயக்கியவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து டிரோனை வனத் துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை மாவட்ட வன அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வனத்துறை சட்டத்தின் கீழ் அனுமதியின்றி டிரோன் இயக்கியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற அனுமதி பெறாமல் மருதமலை சுற்றி டோன்களை இயற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story