*கோடை காலத்தை வரவேற்கும் விதமாக கரூர் மாவட்டம் , கடவூர் பகுதிகளில் இரண்டு நாட்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.*

*கோடை காலத்தை வரவேற்கும் விதமாக கரூர் மாவட்டம் , கடவூர் பகுதிகளில் இரண்டு நாட்களாக மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருகிறது.*
இந்த நிலையில் கடவூர் வட்டாரா பகுதியில் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது விவசாயம் அதிக அளவில் செய்யப்படும் கடவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. கடவூர், தரகம்பட்டி,பாலவிடுதி, மாவத்தூர் மற்றும் முள்ளிப்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதில் கடவூரில் 12 மில்லி மீட்டரும், பாலவிடுதியில் 15 மில்லி மீட்டர் என மொத்தம் 27 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story