திருச்செங்கோட்டில் மாசி மகா மக ஊர்வலம்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மகம் என கொண்டாடப்படுகிறது காசியில் தீர்த்தமாட முடியாதவர்கள் கும்பகோணத்தில் நீராடலாம் என்பதால்தான் கும்பகோணத்தில் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது இந்த நாளில் தீர்த்தமாடுகளும் கிரிவலம் வருதலும் சிறப்புக்குரியதாக கூறப்படுகிறது.கும்ப ராசியில் சூரியன் இருக்கையில் சந்திரன் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் இருப்பார். இப்படி மாசி மாதத்தில் பௌர்ணமியும் மகம் நட்சத்திரமும் ஒன்றாக சேர்ந்து வருகிற நன்னாள்தான் மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு மாசி மகம் மார்ச் 12ஆம் தேதி வருகிறது. அந்த நாளில் அதிகாலை 3.53 மணி துவங்கி, மார்ச் 13ஆம் தேதி காலை 5.09 மணி வரைக்கும் மகம் நட்சத்திரம் இருக்கிறது. இந்த நாளில் இறந்த முன்னோர்களுக்கு திதி செலுத்தி வழிபடுவர். மேலும் கோவில்களுக்குச் சென்று கிரிவலம் வருவர். மாசி மகம் நன்னாளன்று நிறைய பக்தர்கள் கிரிவலம் செல்வதுண்டு. இப்படி செல்வதால் பாவங்கள் நீங்கி நன்மை கிட்டும் என்பது ஐதீகம். குறிப்பாக, கும்பகோணத்தில் நீராடுவது எப்படி சிறப்போ அதேபோல் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதும் இந்த நாளின் சிறப்பாகும். அவ்வாறான இந்த நாளில் திருமண தடை நீங்க குடும்பத்தில் சுபிட்சம் ஏற்பட சிவ பக்தர்கள் ஆன்மீக அன்பர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து மாசி மகத்தன்று திருமலை கிரிவலம் வந்து மலைக்குச் சென்று திருமலையில் உள்ள சித்தி விநாயகர் செங்கோட்டு வேலவர் அர்த்தநாரீஸ்வரர் ஆதிகேசவப் பெருமாள் நாகேஸ்வரர் சுவாமிகளுக்கு அபிஷேக அலங்கார ஆராதனைகள் செய்வார்கள். திருச்செங்கோடு மாசி மக விழா குழுவினர்சுமார் 200க்கும் மேற்பட்டோர் பால் தேன் இளநீர் மற்றும் பூஜை பொருள்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்தனர்.இதே நாளில் பத்ரகாளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழா நடைபெற்றதால் தெற்கு ரத வீதியில் ஏராளமான கூட்டம் இருந்த நிலையில் மாசி மக திருவிழா குழுவினரும் ஊர்வலமாகச் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது.ஊர்வலத்தின் முன் சிவன் பார்வதி வேடமணிந்தவர்கள் இசைக்கேற்ப நடனமாடி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கியபடி சென்றனர் அபிஷேகப் பொருட்களை கூடையில் எடுத்து வந்த மாசி மக விழா குழுவினருக்கு வழி நெடுகிலும் பெண்கள் தீர்த்தம் ஊற்றி பாலூற்றி பூ போட்டு,சந்தனம் குங்குமம் வைத்து காலில் விழுந்து வணங்கினார்கள்.
Next Story



