வீட்டில் வளர்க்கும் நாய்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

வீட்டில் வளர்க்கும் நாய்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
X
திருச்சி நகரில் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கி உள்ளது.
தமிழகத்திலேயே முதன்முதலாக திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தான் தெருநாய்களை கணக்கெடுத்து அது தொடர்பான அறிக்கையை கடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் வெளியிட்டது. மாநகராட்சியின் சுகாதா ரத்துறை தாக்கல் செய்த இந்த அறிக்கையில் திருச்சி மாநகராட்சி பகுதி முழுவதும் சுமார் 43 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாகவும், இதில் சுமார் 21 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு இருப் பதாகவும் கூறப்பட்டு இருந்தது. மேலும் திருச்சி நகரில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து லைசென்சு வாங்க வேண்டியது கட்டாயம் என் றும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது திருச்சி நகரம் முழுவதும் வீடுகளில் வளர்க் கப்படும் செல்ல நாய்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணி யில் மாநகராட்சியின் சுகாதார துறை இறங்கி உள்ளது. தெருநாய்க ளின் எண்ணிக்கையை விட வீட்டில் வளர்க்கப்படும் நாய்களின் எண் ணிக்கை குறைவாக தான் இருக்கும் என்பதால் சுமார் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் நாய்கள் வரை வீடுகளில் இருக்கலாம் என முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை பதிவு செய்வதற்கான இணையதளம் செயல்பாட்டிற்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பதிவு செய்யப்பட்ட பின்னர் ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த புள்ளி விவரங்களையும் ஒப்பீடு செய்து நாய்களின் உரிமையாளர்களிடம் உரிமம் வழங்குவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story