ஜெயங்கொண்டத்தில் வெளுத்து வாங்கிய மழை

ஜெயங்கொண்டத்தில் வெளுத்து வாங்கிய மழை
X
ஜெயங்கொண்டத்தில் எழுத்து வாங்கிய மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
அரியலூர், மார்ச்12- அரியலூர் மாவட்டத்தில் மிதமான மற்றும் சாரல் கலந்த மழை பெய்து வந்தது. இன்று காலை 9.30 மணி முதல்10:30 மணி வரை வெளுத்து வாங்கியது. இந்த மழையானது ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி , உடையார்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்ட பல்வேறு கிராமங்களிலும் பெய்து வருகிறது. கிராமப்புற விவசாயிகள் கடலை, நெல், உளுந்து, முந்திரி போன்ற பயிர்களுக்கு தற்பொழுது பெய்த மழை போதுமானது என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story