கோவை: தமிழக அரசு ஜனநாயக விரோதமாக செயல்படுகிறது !

X
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, தமிழகத்தில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உட்பட பல்வேறு போராட்டங்களுக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்தது. இதற்கு தமிழக அரசு 144 தடை உத்தரவு உட்பட பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் நீதிமன்றத்தின் வாயிலாக ஜனநாயக ரீதியாக அனுமதி பெற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்து வருகிறது. கைதானவர்கள் வீட்டிற்கு நடு இரவில் சென்று வாகனங்களை கேட்டு மிரட்டியுள்ளனர். சாவி இல்லை என்று சொன்ன பிறகு வாகனத்தில் லாக் உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர். திரு. கணேசன் அவர்களின் காரை தோட்டத்தில் வயதானவர்களை மிரட்டி கையெழுத்து வாங்கி வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று வழக்கில் சேர்த்துள்ளனர். காவல்துறையினர் வாகனங்களை சட்டவிரோத பொருட்கள், போதை பொருட்கள், ஆயுதங்கள் வைத்ததாக பொய் வழக்கு போடுவதற்காக எடுத்துச் சென்றதாக இந்து முன்னணி சந்தேகிக்கிறது. மேலும் தமிழகத்தில் இந்து முன்னணி மீது பொய் வழக்கு போட்டு அவதூறு பரப்புவதற்காக இந்து விரோத அதிகாரிகள் செயல்படுவதாக இந்து முன்னணி சந்தேகிக்கின்றது. இதைக் கண்டித்து வருகின்ற 25 ஆம் தேதி திண்டுக்கல்லில் ஜனநாயகத்தை பாதுகாக்க மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என கூறியுள்ளார்.
Next Story

