தக்கலை மருத்துவமனை மாவட்ட ஆட்சித்தலைவர்    பார்வை

தக்கலை மருத்துவமனை மாவட்ட ஆட்சித்தலைவர்    பார்வை
X
பத்மநாபபுரம்
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையினை இன்று 12-ம் தேதி  மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு    தெரிவிக்கையில்-       பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்-நோயாளிகளை சந்தித்து அவர்களின் உடல்நலம் மற்றும் சிகிட்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சேவைகள், ஆய்வக பரிசோதனை வசதிகள், பொருட்கள் வைப்பறை  உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.          தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையை முறைகள் குறித்தும், மேலும் அங்கு பிரசவம் மேற்கொண்டுள்ள தாய்மார்களின்  எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும்  சேவைகள் குறித்தும், பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும், பச்சிளங்குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகள் குறித்தும்,  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது.            மேலும் குழந்தைகள் வார்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அங்கு சிசிச்சை மேற்கொள்ளும் குழந்தைகளிடம் அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறியப்பட்டது.  மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்
Next Story