கனமழையால் சேரும் சகதியுமான நாகூர் - கங்களாஞ்சேரி இணைப்பு சாலை

கனமழையால் சேரும் சகதியுமான   நாகூர் - கங்களாஞ்சேரி இணைப்பு சாலை
X
சீரமைக்கப்படுமா அப்பகுதி மக்கள் கோரிக்கை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணத்தில் இருந்து, நாகூர் - கங்களாஞ்சேரி இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம், உத்தூர், துறையூர், மத்தியக்குடி, தேவன்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாக உள்ளது. மேலும், மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இச்சாலை வழியே நரிமணம் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, நன்னிலம், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், அப்பகுதி பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய சாலையாகவும், பள்ளி, கல்லூரி வாகனங்கள், மோட்டார் சைக்கிள் அதிகம் செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்காக, சாலையின் ஓரம் பொக்லைன் இயந்திரம் கொண்டு பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய் பதித்து பின்னர் பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் pஉள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பெய்து வரும் கனமழையால், சாலை முழுவதும் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேரும் சகதியுமான சாலையை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story