க.விலக்கு அருகே கார் மோதியதில் முதியவர் படுகாயம்

X
ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேல்சாமி(65). இவர் நேற்று(மார்ச்.11) பிராதுக்காரன்பட்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு வீடு திரும்புவதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக ஜெயபிரகாஷ் என்பவர் ஓட்டி வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் வேலுச்சாமி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story

