அரசனூர் கிராமத்தில் மகளிர் சபைக் கூட்டம்

அரசனூர் கிராமத்தில் மகளிர் சபைக் கூட்டம்
X
சிவகங்கை அருகே அரசனூர் கிராமத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சபை கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே அரசனூர் கிராமத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சபைக் கூட்டம் நடைபெற்றது. அரசனூர் சமுதாயக்கூடத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி தலைமையில் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்பிரகாசம் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய ஊரக வளர்ச்சி நிறுவன மாநில தரக் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட ஆதார மையம் மற்றும் மாவட்ட ஊராட்சிகளின் வள மைய அலுவலர் மணிபாரதி ராஜா, மற்றும் 27 மகளிர் குழுவைச் சேர்ந்த மகளிர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் மகளிர்கான சிறப்புச் சட்ட அமைப்புகள்,பாதுகாப்புகள் குறித்து மதுரை பிரிஸ்ட் நிகர்நிலை பல்கலைக்கழக சட்டக்கல்லூரி உதவி பேராசிரியை மனோன்மணி விளக்க உரையாற்றினார். பெண்களுக்கான மருத்துவ திட்டங்கள் குறித்து அரசனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தீபா பிரகாஷ் நாராயணன் விளக்கிப் பேசினார். இ-சேவை மைய சேவைகள் குறித்து மைய நிர்வாகிர் ஷிபா விளக்கினார். தொண்டு நிறுவனம் மூலம் தியான முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் அரசனூர் ஊராட்சி செயலர் மரியதாஸ் நன்றி கூறினார்.
Next Story