அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்.

மதுரை மேலூர் அருகே கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், மேலூர் கச்சிராயன்பட்டி கிராமத்தை சேர்ந்த 18பட்டி கிராம பொதுமக்கள் மற்றும் கிராம அம்பலகாரர்கள் திருப்பணி செய்யப்பட்டு கச்சிராயன்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ துவராவதி அம்மன் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா இன்று 12ந் தேதியன்று சிறப்பாக நடைபெற்றது. கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையிலிருந்து புனித நீரினை சிவாச்சாரியார் தலைமையில் காப்பு கட்டிய பக்தர்கள் கோவிலை ஊர்வலமாக சுற்றி வந்தனர்.அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க அப்போது வானத்தில் கருட பகவான் வட்டமிட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். புனித நீரினை கும்பத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேக நடைபெற்றது. தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ துவராவதி அம்மன் சுவாமிக்கு விசேஷ தீபாரணை நடைபெற்றது. கோவில் முன்பு அன்னதானத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகோடிகள் கலந்து கொண்டு அறு சுவை விருந்தில் சிறப்புசெய்தனர். நிகழ்ச்சியில் கச்சிராயன்பட்டி, கல்லம்பட்டி, மேலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கச்சிராயன்பட்டி 18பட்டி கிராமம், 14 கரை அம்பலகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story